இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியுடன் ஒரு மோததலில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை இந்த தொடரில் அவரை விக்கெட் எடுக்கவே இல்லை, இதை ஆண்டர்சன் ஒப்புக்கொண்டும் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி முதலிடம் வகிக்கின்றார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், கோலி சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் 2014ம் ஆண்டு ஆண்டர்சன் கோஹ்லியை 4 முறை விக்கெட் வீழ்த்தினார்.
எட்டு இன்னிங்ஸ்களில் இருந்து 544 ரன்கள் குவித்து கோஹ்லி, இதுவரை அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறார். தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்தார், இரண்டு முறை அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் குவித்தார், அதில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடரில் கோஹ்லியை விக்கெட் வீழ்த்தாதது குறித்து பேசிய ஆண்டர்சன் கூறியதாவது, “எனக்கு இந்த தொடர் எதிர்பார்த்தது போல நன்றாக இல்லை, நான் அவரை வெளியேற்றவில்லை! வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், உலகின் மிக சிறந்த வீரர். இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். அடுத்த போட்டியில் அவரை வீழ்த்த கடுமையாக முயற்சிப்பேன்”
ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேகராத் சாதனையை முறியடிக்க ஆண்டர்சன் க்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. அதை செய்தால் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அடைவார். இதுவரை இந்த தொடரில் கோஹ்லியை வீழ்த்த முடியாததால் அவர் பெரிதும் விமர்சனத்திற்கு ஆளானார், இதற்கு தற்போது பதில் அளித்த ஆண்டர்சன் கூறியதாவது, கோஹ்லி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக நன்றாக சமாளிக்கிறார். நேர்த்தியாகவும் முன்பைவிட ஆடுகிறார்.
“வளைவு அல்லது ஸ்விங் இருந்தால் ஆட்டத்தின் போக்கு நன்றாக இருக்கும், அப்பொழுது தான் வீரர்களை திணற வைக்கும், ஆனால் கோஹ்லி இந்த தொடரில் தவறை திருத்திக்கொண்டு முன்பு இருந்ததை விட அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார், சில நேரங்களில் அவர் என்னையும் ஏமாற்றிவிடுகிறார், அது வெறுப்பாக இருக்கிறது. ஆனால் அவருக்கு நிச்சயம் பாராட்டுகள் சென்றடைய வேண்டும், அவர் ஒரு அற்புதமான வீரர், “ஆண்டர்சன் கூறினார்.
கோஹ்லி, துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே ஆகியோர் அரை சதம் அடித்தும் இந்திய அணியின் கீழ் ஆர்டர்களின் சப்போர்ட் இல்லாததால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் நிலை வந்தது. இந்த தொடரில் இன்னும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் மீதமுள்ளது.