இதுவரை யுவராஜ் சிங் ஆறுமுறை ஐசிசி இறுதி போட்டியில் விளையாடி இருக்கிறார்,அதில் அவர் எவ்வாறு எல்லாம் விளையாடினார் என்று பார்க்கலாம்.
ஐசிசி 2000 நாக்அவுட் :
யுவராஜ் தனது முதல் ஐசிசி போட்டியில் 2000வது வருடத்தில் விளையாடினார்,அதில் யுவராஜ் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் அடித்தார். அவர் மூன்று இன்னிங்ஸில் 47.66 சராசரியுடன் 143 ரன்கள் எடுத்து இந்தியாவின் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்தார்.இந்த போட்டியில் கங்குலி சிறப்பான சதம் அடித்தார் 50 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்தார், ஆனால் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன் டிராபி 2002 :
இந்த தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையுடன் மோதியது, ஆனால் இந்த போட்டிகள் மழை காரணமாக கை விடப்பட்டது,இந்த போட்டியில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து.
ஐசிசி உலகக் கோப்பை 2003 :
இந்த உலக கோப்பை பொடியில் நெஹ்ரா அபாரமாக பந்து வீசி 23 ரன்கள் குடுத்து 6 விக்கெட் எடுத்தார்.பிறகு இறுதி போட்டிக்கு இந்திய அணி சென்றது இதில் இந்திய அணி 360 ரன்களை வெற்றி இலக்காக எடுத்து களம் இறங்கியது இதில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் யுவராஜ் சிங் 34 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
ஐசிசி உலக கோப்பை டி20 2007 :
இந்த தொடரில் தோனி வெறும் இளம் வீரர்களை மட்டும் வைத்து 2007 டி20 உலக கோப்பையில் இந்திய அணி விளையாடியது,இந்த தொடரில் தான் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் ஆறு சிஸேர்கள் அடித்தார். இதில் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது இதில் யுவராஜ் 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார், இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஐசிசி உலகக் கோப்பை 2011 :
இந்த உலக கோப்பை தொடர் யுவராஜ் சிங்கிற்கு மறக்க முடியாத ஒன்று இந்த தொடரில் மொத்தம் யுவராஜ் 362 ரங்களும் 15 விக்கெட்டும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.பிறகு இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதியது இதில் யுவராஜ் 2 விக்கெட்களும் 24 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆடம் இழக்காமல் இருந்தார்.இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஐசிசி உலக டி20 கோப்பை 2014 :
இந்த தொடரில் யுவராஜ் மிகவும் மோசமாக விளையாடினார்,இந்த தொடர்களில் யுவராஜ் ஐந்து போட்டிகள் விளையாடி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இன்றய ஐசிசி சாம்பியன் ட்ரோபி போட்டியில் யுவராஜ் 7வது முறை உலக கோப்பையில் விளையாடுகிறார்.