நாளை இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இரண்டாவது அரை இறுதி போட்டிகளில் மோதுகிறது இந்த போட்டிகள் நாளை பிற்பகல் 3மணி அளவில் நடக்க உள்ளது.
இதில் ஆச்சிரியம் என்னவென்றால் நாளை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் தனது 300வது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளார். இதுவரை இந்திய அணி தரப்பில் 300வது சர்வதேச ஒரு நாள் போட்டிகள் விளையாடும் வீரர்களில் யுவராஜ் சிங் தான் ஐந்தாவது வீரர் ஆவர். ஒட்டுமொத்த போட்டிகளின் படி 300வது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் யுவராஜ் 19வது வீரர் ஆவர்.
அதிக சர்வதேச ஒரு நாள் போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 463 ஒரு நாள் போட்டிகள் விளையாடி சச்சின் முதல் இடத்தில உள்ளார்.இரண்டாவது இடத்தில் 340 போட்டிகள் விளையாடி டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார் பிறகு மூன்றாவது இடத்தில் 308 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் விளையாடி கங்குலி உள்ளார்.
ஐசிசி தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதில் யுவராஜுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. 2011 உலக கோப்பையில் கூட யுவராஜ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக கலக்கி தொடரின் நாயகன் பட்டத்தை தட்டி சென்றார்.2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ், 2011 உலக கோப்பை தொடரிலிருந்து தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார். அந்த போட்டியில் அவர் 127 பந்துகளில் 150 ரன்களை எடுத்து அசத்தினார்.இந்த சாம்பியன் ட்ரோபியில் கூட பாகிஸ்தான் அணியுடன் யுவராஜ் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது போட்டியில் 7 ரன்களும் மூன்றாவது போட்டியான தென் ஆப்பிரிக்கா அணியுடன் 23 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.நாளை யுவராஜ் தனது 300வது போட்டியில் என்ன செய்ய போகிறார் என்று சற்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.யுவராஜ் புற்று நோயிற்கு பிறகும் இவ்வாறு சிறப்பாக விளையாடுவது ஆச்சிரியம் தான்,அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் கடுமையான நேரங்களைக் கண்டிருக்கிறார், மேலும் அவர் ஒரு போராளியாகவும், உயிர்களை ஈர்க்கிறார் என்று பெருமைப்படுகிறார்.
இதனை அவர் பெருமையுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
விரைவில் தோனியும் 300 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட போகிறார் :
இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனி 300 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளார் அவர் தற்போது 390 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.