மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் ஃபீல்டிங் மிகவும் மோசமான ஒன்றாக இருந்தது. உலககோப்பைக்கு முன்பாக இதனை கவனித்து சரிசெய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கருது தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. இதில் பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கிய இந்திய அணி பந்துவீச்சு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ரன்களை வாரி வழங்கினர். அதேபோல் அவ்வப்போது ஃபீல்டிங் மோசமாக இருந்ததையும் கவனிக்க முடிந்தது.

வாஷிங்டன் சுந்தர், ரோகித் சர்மா இருவரும் எளிதாக வந்த கேட்ச்களை கூட பிடிக்க திணறினர். ரோகித் ஒருசில கடினமான பந்தை லாவகமாக பிடித்தார். ஆனால் எளிதாக வந்த பந்துகளை கோட்டை விட்டார். இறுதியாக, இந்திய அணி வெற்றிபெற்றாலும், அணியின் ஃபீல்டிங்கை விரைவில் சரிசெய்ய என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறிதாவது:

“இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பீலடிங் மிகவும் மோசமானதாக இருந்தது, இளம் வீரர்கள் பந்தை சற்று தாமதமாக எதிர்வினையாற்றுகின்றனர்! என்று கூறியுள்ளார். பீல்டிங்கில் கோட்டை விட்டாலும் இந்தியாவின் பேட்டிங் மிகவும் பலமாக இருப்பதால் இந்த இமாலய இலக்கை அடையும் என்று அவர் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆண்டு உலககோப்பைக்குள் பலமான இந்திய அணி உருவாகும்” எனவும் கூறினார்.