முன்னாள் இந்திய கேப்டனும் கொல்கத்தாவின் நாயகனும் ஆகிய கங்குலிக்கு இன்று 45வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு அவரின் பிறந்த நாளிற்கு யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
யுவராஜ் சிங் இதுவரை கங்குலி, தோனி மற்றும் விராட் கோஹ்லி தலைமையில் விளையாடி உள்ளார் ஆனால் இவர்களில் யுவராஜ் சிங்கிற்கு பிடித்த கேப்டன் என்றால் சௌரவ் கங்குலி தானாம் என்று யுவராஜ் சிங் ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்து உள்ளார் யுவராஜ் சிங் முதல் முதலில் இந்திய அணியின் விளையாடிய பொழுது கங்குலி தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.
அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கான கருத்தில் பிரபலமடைவதற்கு கங்கூலி பாராட்டப்படுகிறார். அவர் தனது நேரத்தை மிகவும் சோதனைக்குட்படுத்தியவராக இருந்தார் மற்றும் இளம் வரவிருக்கும் பெயர்கள் ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.
இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் கங்குலிக்கு ஒரு நல்ல நெருக்கம் உள்ளது, இதனால் இன்று கங்குலியின் பிறந்த நாளிற்கு யுவராஜ் சிங் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
கங்குலி பிறந்த நாளிற்கு வாழ்த்திய யுவராஜ் :
கங்குலி இந்திய அணிக்கு சிறந்த கேப்டனாக இருந்தது மட்டும் இல்லாமல் சிறந்த வீரராகவும் செயல் பட்டு இருக்கிறார்.சௌரவ் கங்குலி இந்திய அணியின் சிறந்த கேப்டன் ஆவார்.
இடதுகை வீரரான கங்குலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 133 போட்டிகள் விளையாடி உள்ளார். இந்த 133 டெஸ்ட் போட்டிகளில் கங்குலி 7212 அடித்து உள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 311 போட்டிகள் விளையாடி உள்ளார் இதில் கங்குலி 11,363 ரன்கள் அடித்து உள்ளார்.
தற்போது கங்குலி இந்திய அணியின் CAC குழுவின் பதவியில் உள்ளார்.