இந்தியாவின் யுவராஜ் சிங் இந்தியாவில் பல ரசிகர்களை வைத்துள்ளார், காரணம் அவருடைய அதிரடி பேட்டிங் மட்டும் அழகு தான். அவருக்கு இந்தியாவில் பெண் ரசிகர்களும் உள்ளனர். சிறிது நாளுக்கு முன்பு முடியை ஸ்டைலாக வெட்டிக்கொண்டு, அவரது அழகை உயர்த்தினார்.
அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் புது புது ஹேர் ஸ்டைலுடன் வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஸ்டைலாக முடி வெட்டி கொண்டு, அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த ஹேர் ஸ்டைலை அவரது ரசிகர்கள் பல பேர் பாராட்டினார்கள்.
சிலர் அதை புகழ, சில அந்த ஹேர் ஸ்டைல் விராட் கோலியை விட நன்றாக இருக்கிறது என கூறினார்கள். சில பேர் அதே ஹேர் ஸ்டைலை நான் வைத்து கொள்ள போகிறேன் என கூறினார்கள்.
சிறிது நாளுக்கு முன்பு தாடி இல்லாமல் ரெய்னா, தவான், ரோகித், ரஹானே ஆகியோர் செல்பி எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் “யுவராஜோட தலைக்கச்சு காணோம்” என ரோகித் சர்மா ட்வீட் பண்ணிருந்தார்.
யுவராஜ் சிங்க் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான இந்திய அணியில் இருப்பதால், இங்கிலாந்து செல்ல உள்ளனர். இந்தியாவின் முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.