ரோஹித் சர்மா எப்பொழுதும் கவலையாகவே உள்ளார்; உண்மையை உடைத்த சாஹல்
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வென்று முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து ரோஹித் சர்மா வருத்தத்தில் உள்ளார். அவரின் மனதில் தொடர்ந்து ஒரு விடயம் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. அது யாதெனில் :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மாவிற்கு பெண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில நாட்களிலே ரோஹித் இந்திய அணிக்கு விளையாட வந்துவிட்டார். இந்நிலையில் அவரது எண்ணம் எல்லாம் அவரது தனது மனைவி மற்றும் மகளை பற்றியே இருக்கிறது. எனவே, அவர் தனிமையில் இருப்பதாக உணர்கிறார் என்று சாஹல் தெரிவித்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 26ம் தேதி காலை 7.30 மணியளவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.