ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர்களில் சஹாலும் ஒருவர். நிறைய போட்டிகளில் மிக அற்புதமாக பந்துவீசி அணிக்கு தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுப்பார். விராட் கோலியின் நம்பிக்கையான ஒரு பந்து வீச்சாளராக பல போட்டிகளில் இவர் விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் அவர் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் காணப்படுகிறார். சமீபத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அந்தக் கேள்விக்கு சஹால் கூறியுள்ள பதில் அனைத்து சென்னை ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நிச்சயமாக நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்திருப்பேன்
அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் பெங்களூரு அணிகள் ஒருவேளை விளையாடாமல் போயிருந்தால் எந்த அணியில் விளையாடி இருப்பீர்கள் என்ற கேள்விதான். அதற்கு சற்றும் யோசிக்காமல் நான் பெங்களூர் அணியில் விளையாடாமல் இருந்திருந்தால் நிச்சயமாக மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி இருந்து இருப்பேன் என்று கூறினார்.
அவர் கூறியது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனியின் தலைமையில் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். எனவே அவரது தலைமையின் கீழ் விளையாடவே அவர் ஆசைப்படுவார் என்று சிலர் கணித்திருந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சஹால்
மொத்தமாக 106 போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய சஹால் 125 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவரது எக்கானமி 7.71 மற்றும் அவரேஜ் 23.3 ஆகும்.