கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, தான் எதிர்கொண்ட மிக மோசமான சம்பவம் ஒன்றை யுஸ்வேந்திர சாஹல் தற்போது வெளியிட்டுள்ளார்.
2014 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த யுஸ்வேந்திர சஹால், தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பல முறை பெங்களூரு அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதுவரை(15வது சீசனை சேர்க்காமல்) ஐபிஎல் தொடரில் 113 போட்டிகளில் பங்கேற்று 139 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ள சஹாலை, 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெங்களூர் அணி இவரை விடுவித்தது.

ஒருவேளை சஹாலை தக்கவைக்காமல் ஏலத்தில் பெங்களூர் அணி எடுக்க திட்டமிட்டுள்ளது என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைவரது எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு சஹாலை தனது அணியில் 6.50 கோடி தொகைக்கு ஒப்பந்தம் செய்துவிட்டது.
எதற்காக ராஜஸ்தான் அணி சஹாலை தேர்ந்தெடுத்ததோ அந்த பணியை சஹால் மிகவும் சிறப்பாக செய்து அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறார்.
வெகுளி தன்னத்திர்க்கு பெயர்போன நட்சத்திர வீரர் சஹால் தன்னுடைய வாழ்கையில் நடைபெற்ற சுவராஸ்யமான மற்றும் நகைச்சுவையான விசயங்களை அவ்வப்பொழுது தெரியப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
அதில் பேசிய அவர்,“ நான் இதற்கு முன் இந்த சம்பவத்தை யாரிடமும் கூறியது கிடையாது, தற்பொழுது என அனைவரும் தெரிந்துகொள்ளட்டும், 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது பெங்களூரில் எங்களுக்கு போட்டி நடைபெற்றது அப்போது அங்கு கெட் டு கெதர் பார்ட்டி நடைபெற்றது, அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஒரு வீரர் அவருடைய பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அதிகமாக குடித்துவிட்டு என்னை நீண்ட நேரமாக பார்த்து கொண்டே இருந்தாள் பின் என்னை அழைத்து பால்கனியில் தொங்க விட்டு விட்டார், அது 15வது மாடி, அப்பொழுது மட்டும் என்னுடைய பிடி நழுவி இருந்தால் நடந்திருப்பது வேறு அப்பொழுது அங்கிருந்த மக்கள் அனைவரும் வந்து என்னை காப்பாற்றி தண்ணீர் கொடுத்து உதவினார்கள் அந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது,