கோஹ்லி இல்லை; எனது முன்னேற்றத்திற்கு இவர் தான் முக்கிய காரணம்; சாஹல் சொல்கிறார் !
தன்னை எப்பொழுதும் சரியான பாதையில் வழிநடத்துபவர் தோனி தான் என யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசால்டாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒவ்வொரு போட்டியின் முடிவை தொடர்ந்தும் சென்னை அணியின் கேப்டனான தோனியை இளம் வீரர்கள் படை சூழ்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய போட்டியிலும் தோனியை பெங்களூர் அணியின் இளம் வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான யுஸ்வேந்திர சாஹலும் தோனியிடம் சில நிமிடங்கள் பேசினார்.

இந்நிலையில், அந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சஹால் “என்னை எப்போதுமே சரியான பாதையில் வழிநடத்துபவர்” என கேப்ஷன் கொடுத்து தோனியை புகழ்ந்துள்ளார்.
சாஹலின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.