இதை செய்தால் இந்திய வீரர்களை திணறடிக்கலாம்; தென் ஆப்ரிக்கா வீரருக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 1

இதை செய்தால் இந்திய வீரர்களை திணறடிக்கலாம்; தென் ஆப்ரிக்கா வீரருக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான்

விசாகப்பட்டிணத்தில் இந்தியாவுக்கு எதிராக அக்.2ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியப் பிட்ச்கள், சூழ்நிலைமைகளுக்கு கேகிசோ ரபாடா தன் பந்து வீச்சை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜாகீர் கான் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதை செய்தால் இந்திய வீரர்களை திணறடிக்கலாம்; தென் ஆப்ரிக்கா வீரருக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 2

தற்போது ரபாடா உலகின் தலைசிறந்த பவுலர்களுள் ஒருவராவார், 37 டெஸ்ட் போட்டிகளில் 176 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ஜாகீர் கான் கூறியதாவது:

ஏகப்பட்ட நல்ல பவுலர்கள் தற்போது பந்து வீசி வருகின்றனர், இதில் ரபாடா அந்த இடத்தில் இருக்கிறார். அவர் ஆடிய குறுகிய காலத்திலேயே உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற இடத்துக்கு அவர் விரைந்து முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தாக்கம் பெரியது அவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை இதன் பிரதிபலிப்பாகும்.

இதை செய்தால் இந்திய வீரர்களை திணறடிக்கலாம்; தென் ஆப்ரிக்கா வீரருக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 3

இந்தியாவிற்கு ஏற்ற படி அவர் எப்படி தன்னை தக அமைத்துக் கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒரு பவுலர் வெற்றி பவுலராகத் திகழ வேண்டுமெனில் பந்து பளபளப்பு இழந்து பழைய பந்தாகும் போது எப்படி வீச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கியமானது. எனவே ரபாடா இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன் பந்து வீச்சை மாற்றிக் கொண்டு ரிவர்ஸ் ஸ்விங்கை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *