இவரை இந்திய அணியின் “சைலன்ட் ஹீரோ” என்று புகழ்ந்த ஜாகிர் கான் ! 1

இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சைலன்டாக தனது வேலையை செய்து வருகிறார்  என்று இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என வெறித்தனமாக தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து நடைபெற்று தற்போது முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இதனால் இந்திய அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவரை இந்திய அணியின் “சைலன்ட் ஹீரோ” என்று புகழ்ந்த ஜாகிர் கான் ! 2

இந்நிலையில், இந்த டி20 தொடரில் பந்துவீச்சில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய ஷர்துல் தாகூரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டும் கடைசி இரண்டு போட்டிகளிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஷர்துல் தாகூர் இந்த கடைசி இரண்டு போட்டிகளிலும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இவர் இந்த தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் ஷர்துல் தாகூரை இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் பாராட்டி இருக்கிறார். ஜாகிர் கான் பேசுகையில் “இந்திய அணியில் நிறைய பெரிய வீரர்கள் சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஷர்துல் தாகூர் அமைதியாக இருந்து தனது வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். இவர் இந்த தொடரின் “சைலன்ட் ஹீரோ” ஆக உள்ளார்.

இவரை இந்திய அணியின் “சைலன்ட் ஹீரோ” என்று புகழ்ந்த ஜாகிர் கான் ! 3

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இருந்து ஷர்துல் தாகூர் சிறந்த வீரராக மாறிவிட்டார். ஆஸ்திரேலிய தொடரில் ஒரு முக்கியமான அரை சதம் விளாசினார் மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்”  என்று பாராட்டிப் பேசியிருக்கிறார் ஜாகிர் கான். 

இவரை இந்திய அணியின் “சைலன்ட் ஹீரோ” என்று புகழ்ந்த ஜாகிர் கான் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *