2018 பிப்ரவரி மாதம் இரண்டு சிறிய அணிகளான ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜாவில் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்த தொடர் முதலில் டி20 தொடருடன் தொடங்கவுள்ளது. முதல் டி20 போட்டி பிப்ரவரி 5 மற்றும் இரண்டாவது டி20 போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி விளையாடவுள்ளார்கள். அதற்கு பிறகு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடர், பிப்ரவரி 19ஆம் தேதி முடிகிறது.
இந்த தொடர் முடிந்த பிறகு ஜிம்பாப்வே அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட ஆப்கானிஸ்தான் அணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால்,இந்த இரண்டு அணிகளின் ஒரிஜினல் பிளான் என்னவென்றால், இந்த இருதரப்பு தொடரை முடித்துவிட்டு, இரண்டு அணிகளும் முத்தரப்பு தொடருக்காக வங்கதேசத்திற்கு செல்லவுள்ளன. இரண்டு அணிகளும் உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்த போட்டிகளில் முடிந்த பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடலாம் என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
“நாங்கள் இன்னும் முன்மொழியப்பட்ட டெஸ்ட் தொடரை பற்றி விவாதித்து வருகிறோம். 2019 உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் முடிந்ததும், டெஸ்ட் போட்டிகளில் விளையாட பார்க்கிறோம்,” என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், ஜிம்பாப்வே பண நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளை எதிரணியின் மண்ணில் விளையாட நினைப்பார்கள். இன்னொரு பக்கம், டிசம்பர் 5, 7 மற்றும் 10ஆம் தேதி ஷார்ஜாவில் அயர்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.
“2019 உலககோப்பைக்கு தகுதி சுற்று போட்டிக்கு முன்னர் இரண்டு அணிகளும் ஷார்ஜாவில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது இரண்டு அணிகளும் மோதுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,” என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) தலைவர் அடிப் மஷால் கூறியுள்ளார்.
முழு சுற்றுப்பயணத்தின் அட்டவணை இங்கு உள்ளது:
பிப்ரவரி 5 – முதல் டி20, ஷார்ஜா
பிப்ரவரி 6 – இரண்டாவது டி20, ஷார்ஜா
பிப்ரவரி 9 – முதல் ஒருநாள், ஷார்ஜா
பிப்ரவரி 11 – இரண்டாவது ஒருநாள், ஷார்ஜா
பிப்ரவரி 13 – மூன்றாவது ஒருநாள், ஷார்ஜா
பிப்ரவரி 16 – நான்காவது ஒருநாள், ஷார்ஜா
பிப்ரவரி 19 – ஐந்தாவது ஒருநாள், ஷார்ஜா