முத்தரப்பு டி.20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடனான முத்தரப்பு டி.20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வீரர்களான சிகந்தர் ரசா, பிராண்டன் டெய்லர், முன்னாள் கேப்டன் கிரேம் கிரிமர், வில்லியம்ஸ், கிரேக் எர்வின் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டிற்குப் பிறகு அணியில் விளையாடாமல் இருந்த சிகும்புரா, ஹாமில்டன் மசகட்சா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதற்கிடையே, சம்பளம் பாக்கி தொடர்பாக ஜிம்பாப்வே வீரர்கள், பயிற்சி முகாமை நிராகித்து வந்தனர். இதனால் தொடர் நடக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி;
சிபாஸ் ஜுஹுவோ, சாமு சிபாபஹா, ஹாமில்டன் மசகடா, சலோமன் மைர், தரிசை முஸாகண்டா, தினாசே கமுன்குவாமே, இல்டன் சிக்கும்புரா, மால்கம் வால்லர், பிரைன் சாரி, பீட்டர் மூர், டோனால்ட் திரிபானோ, வெல்லிங்டன் மாசகண்டஷே, தெண்டி சிசோரா, பிளசிங் முசாரபானி, ரயான் முர்ரே, கெய்ல் ஜார்விஸ், கிரிஸ் மொஃபு, பிரின்ஸ் மாஸ்வரே, ஜான் நுயும்பு, ரயான் புர்ள், பிராண்டன் மவுட்டே, ருகாரே மகாரிரா.
ஆஸ்திரேலிய டி.20 அணி;
ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி, ஆஸ்டன் ஆகர், டர்வீஸ் ஹெட், நிக் மேடின்சன், கிளன் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி.ஆர்கி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரியூ டை, ஜாக் வில்ட்முர்த்.