முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் !! 1
Harare: Pakistan players celebrate taking the wicket of Zimbabwean captain Hamilton Masakadza during the T20 cricket match between Zimbabwe and Pakistan at Harare Sports Club, in Harare, Sunday, July 1, 2018. AP/PTI(AP7_1_2018_000153B)
முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் !! 2

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் 2-வது முறையாக மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் சுவாயோ, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சுவாயோ 26 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 94 ரன்கள் குவித்தார். முசகண்டா 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் !! 3
Harare: Pakistan players celebrate taking the wicket of Zimbabwean captain Hamilton Masakadza during the T20 cricket match between Zimbabwe and Pakistan at Harare Sports Club, in Harare, Sunday, July 1, 2018. AP/PTI(AP7_1_2018_000153B)

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பகர் சமான் 38 பந்தில் 47 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.

அதன்பின் வந்த ஹொசைன் தலாத் 35 பந்தில் 44 ரன்களும், கேப்டன் சர்பிராஸ் அஹமது 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *