உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் சுவீடனை வென்று எளிதாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
அதிர்ச்சியளித்த நாக் அவுட் சுற்று 
உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன. உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன.
முன்னணி அணிகளாக கருதப்பட்ட ஸ்பெயின், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது
பிரேசில் வெளியேற்றம் 
நேற்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணியை வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் என நம்பப்பட்ட பிரேசில் அணி, பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சிகரமான வெளியேறியது.
இந்தநிலையில், இன்று நடைபெற்றமுதல் காலிறுதி போட்டியில் சுவீடன் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதின. போட்டியின் முதல் பாதியில் 30வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மகிரே தலையில் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் 58வது நிமிடத்தில் டேலி அல்லி ஒரு கோலடித்து இங்கிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்த்தார். 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஸ்வீடனை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Match video
இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


 • SHARE

  விவரம் காண

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

  தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

  Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...