அரையிருதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் 1

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுகள் முடிந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்.

முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் ஒரு கால்இறுதியில் முன்னாள் சாம்பியன்கள் பிரான்சும், உருகுவேயும் மோதின.
அரையிருதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் 2
உருகுவேவுக்கு எதிராக  இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் கடைசியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில் அதில் 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது
சற்று மந்தமாக ஆட்டம் நடந்து வந்த நிலையில், 40வது நிமிடத்தில் வரானே கோலடிக்க 1-0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.
அரையிருதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் 3
இரண்டாவது பாதியில் 61வது நிமிடத்தில் நட்சத்திர வீரசர் க்ரீஸ்மான் ஒரு கோல் அடித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றார்.
ஆட்டத்தின் இறுதியில்,  உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றது. காலிறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.
அரையிருதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் 4
இதனால், 6 வது முறையாக உலகக்கோப்பை அரையிருதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் அணி.

Leave a comment

Your email address will not be published.