பாகிஸ்தான் அணிக்கு இருந்த தைரியம் அப்பொழுது இந்திய அணிக்கு இல்லை; இந்திய அணி குறித்து பேசிய ரவி சாஸ்திரி !! 1

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உலக கோப்பை தொடரில் இந்திய அணி செயல்பாடு குறித்தும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பேசியுள்ளார்.

2021 உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டபோது நடைபெற்ற நிகழ்வு குறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அதிகமாக பேசி வருகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு இருந்த தைரியம் அப்பொழுது இந்திய அணிக்கு இல்லை; இந்திய அணி குறித்து பேசிய ரவி சாஸ்திரி !! 2

இந்த நிலையில் நடந்து முடிந்த 2021உலகக் கோப்பை தொடர் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ரவிசாஸ்திரி பேசியுள்ளார்.

2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் பரிதாபமாக தோல்வியை தழுவி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பாதியிலேயே வெளியேறியது, இது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அணிக்கு இருந்த தைரியம் அப்பொழுது இந்திய அணிக்கு இல்லை; இந்திய அணி குறித்து பேசிய ரவி சாஸ்திரி !! 3

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியதாவது, “பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடியது ஆனால் இந்திய அணியோ பயந்துவிட்டது, எந்த ஒரு பயமும் இல்லாமல் சிறப்பாக விளையாடினால் எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும் எளிதாக சமாளித்து விடலாம் ஆனால் ஒருவேளை பயந்து நடுங்கிவிட்டால் தோல்வி பயத்தை சமாளிப்பது என்பது மிகப் பெரும் கடினம், மேலும் உலக கோப்பை தொடர் போன்ற ஒரு பெரிய தொடரில் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி விட்டால் அப்பொழுது மிகப்பெரும் நெருக்கடியை ஒரு அணி சமாளிக்க ஆரம்பித்துவிடும் என்று ரவி சாஸ்திரி அதில் பேசியுள்ளார் .

மேலும் பேசிய அவர், 2019 உலக கோப்பை தொடர் போன்று 2021 உலக கோப்பை தொடர் கிடையாது, 2019 உலகக்கோப்பை தொடரில் ஒரு அணி அனைத்து அணிகளுடன் போட்டி போட்டு இறுதி சுற்றுக்கு முன்னேறும் அந்த போட்டி தான் மிகவும் சிறப்பானது என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.