ஐபிஎல் தொடரை போலவே உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இயன் சாப்பல் விளக்கம்! 1

ஐபிஎல் தொடரை போலவே உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இயன் சாப்பல் விளக்கம்

இந்தியாவில் ஆரம்பத்தில் மிக பாதுகாப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற துவங்கியது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகளில் உள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரனோ தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக விளையாடும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களும் அவர்களது வீட்டிற்கு பத்திரமாக வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தனக்கு மேலும் ஒரு விஷயத்தை உறுதிப் படுத்துகிறது என்று இயன் சாப்பல் கூறியிருக்கிறார். அது இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் தான். நிச்சயமாக அதுவும் ஐபிஎல் தொடரை போலவே பாதியில் நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது மொத்தமாகவே தொடரை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போட வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரை போலவே உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இயன் சாப்பல் விளக்கம்! 2

கிரிக்கெட் வரலாற்றில் நடந்த ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட இயன் சாப்பல்

இது சம்பந்தமாக பேசியுள்ள இயன் சாப்பல், 1970-71 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ஒரு டெஸ்ட் போட்டியில் போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பலமாக மழை பெய்தது. இதன் காரணமாக ஒரு பந்து கூட வீசப் படாமல் அந்தப் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் அந்தப் போட்டியில் மூலம் இழந்த வருவாயை மீட்பதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டியை நடத்த இருநாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த முடிவைப் பற்றி இந்த இரு அணி வீரர்களுக்கு துளி கூட தெரியாது. வீரர்களை பரிசீலிக்காமல் எப்படி இவ்வாறு முடிவை அவர்களே எடுப்பது என்று அனைத்து வீரர்களும் கோபம் கொண்டது தனி விஷயம் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரை போலவே உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இயன் சாப்பல் விளக்கம்! 3

அதேபோல மற்றொரு சம்பவமாக 2006இல் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த டெஸ்ட் போட்டியில் பால் டேம்பெரிங் சம்பந்தமாக பாகிஸ்தான் வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் 5 ரன்கள் பெனால்டி விதத்தில் இங்கிலாந்து அணிக்கு கொடுக்கப்பட்டது.

இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனது அணி வீரர்களை அனைத்துக் கொண்டு அந்த போட்டியில் விளையாட போவதில்லை என்று அதிரடியாக கூறினார். மேலும் ஆட்டத்தை விட்டு விலகி கொள்வதாகவும் கூறினார். இதனால் ஆட்டம் பல மணி நேரம் இலுவையில் இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் வந்து விளையாடாத காரணத்தினால் அந்த போட்டியின் முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்த சம்பவத்தையும் இயன் சாப்பல் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் கட்டுக்குள் இல்லாத கோரோனோ

இந்தியாவில் தற்பொழுது நிலைமை மோசமாக இருக்கிறது. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதேசமயம் பலி எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே செல்கிறது. அதன் காரணமாகவே ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. நிச்சயமாக இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற துளிகூட வாய்ப்பே இல்லை எனக்கூறி, உலக கோப்பை டி20 தொடர் நிச்சயமாக அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறினார். ஒருவேளை ஐசிசி இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு விட்டால் கண்டிப்பாக அது இந்தியாவில் நடைபெறாது வேறு எங்காவது பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.