கால்பந்து உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய அணிகள் 1

ரஷ்யாவில் உலகக்கோப்பை போட்டிகள் தனது விறுவிறுப்பை எட்டியுள்ளன. காலிறுதி போட்டிகள் முடிவடைந்து தற்போது நாளை அரையிறுதி சுற்றுகள் துவங்க இருக்கின்றன. இதைல் தேர்வு பெற்ற நான்கு அணிகளும் ஐரோப்பாவை சேர்ந்தவை என்பதால், ஐரோப்பாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.

Image result for russia world cup 2018

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் பெல்ஜியம், பிரான்ஸ், குரோஷியா, இங்கிலாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய அணிகள் நுழைந்துள்ளன. இது கடந்த 1934, 1966, 1982, 2006 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள 5வது நிகழ்வாகும்.

உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை ஐரோப்பா, தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகளே மாறி மாறி கோப்பையை கைப்பற்றி வந்துள்ளன. அவற்றில் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகள் 11 முறையும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகள் 9 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.

World Cup 2018: Croatia Beat Russia On Penalties To Set Up Semi-Final Clash With England

இம்முறை தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், உருகுவே, அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு ஆகிய அணிகள் காலிறுதி வரை முன்னேறின. எனினும், ஒரு அணியால் கூட அரையிறுதியை எட்ட முடியவில்லை.

கால்பந்து உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய அணிகள் 2

குறிப்பாக சாம்பியன் அணியும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியுமான பிரேசிலும் வெளியேறியுள்ளது. இதன் மூலம், கடந்த 1958ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் நடத்தப்படும் உலகக்கோப்பை போட்டிகளில் தென் அமெரிக்க அணி ஒன்று, கோப்பையை வென்றதில்லை எனும் சோகம் தொடருகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *