ஸ்ரேயஸ் ஐயர் வேண்டாம்… இப்போதைக்கு இந்த பையன் தான் உங்களுக்கு தேவை; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்
முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, இந்திய அணியில் தீர்க்க முடியாத பிரச்சனையான நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம் என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு இந்த வருடம் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என நம்பப்படுகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, நான்காவது இடத்தில் யாரை களமிறக்க வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடத்தில் களமிறங்க போவது யார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்திய அணி யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் இந்திய அணி நான்காவது இடத்தில் இஷான் கிஷனையே களமிறக்க வேண்டும். ஸ்ரேயஸ் ஐயரை விட இஷான் கிஷனிற்கு இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷனால் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை இலகுவாக சமாளிக்க முடியும். குறிப்பாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் இஷான் கிஷனின் தேவை இந்திய அணிக்கு ஏற்படும்” என்று தெரிவித்தார்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், கே.எல் ராகுல், இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், பும்ராஹ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.