நம்ம பையன் தான் விட்றுங்க… நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து நல்ல மனிதன் என்பதை நிரூபித்த விராட் கோலி
உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் விராட் கோலியின் பெருந்தன்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி மிரட்டல் வெற்றி பேசப்பட்ட அளவிற்கு, பெங்களூர் – லக்னோ இடையேயான போட்டியின் போது விராட் கோலி – கவுதம் கம்பீர் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி – கவுதம் கம்பீர் இடையேயான வாக்குவாதத்திற்கு லக்னோ அணிக்காக விளையாடிய ஆஃப்கானிஸ்தான் வீரரான நவீன் உல் ஹக்கே காரணமாக இருந்தார். நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவாகவே கவுதம் கம்பீர், விராட் கோலியிடம் சண்டைக்கும் சென்றார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் செல்லும் இடம் எல்லாம் அங்கிருக்கும் ரசிகர்கள் கோலி, கோலி என கூச்சலிட்டு கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக்கை வம்பிழுத்து வருகின்றனர்.
கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் ரசிகர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் முடிந்து பல மாதங்களாகிவிட்டாலும், இந்த பிரச்சனை மட்டும் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போதும் ரசிகர்கள் கவுதம் கம்பீரை வம்புக்கு இழுக்க அதற்கு கவுதம் கம்பீர் அருவருக்க தக்க வகையில் பதிலடியும் கொடுத்தார்.
Delhi crowd erupts with ‘Kohli, Kohli’ chants when Naveen Ul Haq was on strike. pic.twitter.com/GrkpAMSIgj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 11, 2023
இந்தநிலையில், இதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடைபெற்ற இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியின் போதும், ரசிகர்கள் நவீன் உல் ஹக் பந்துவீசும் போது கோலி, கோலி என தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே இருந்தனர். ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே இருந்ததால், விராட் கோலி ரசிகர்களை நோக்கி நவீன் உல் ஹக்கை வெறுப்பேற்றும் வகையில் கூச்சலிட வேண்டாம், அமைதியாக இருங்கள் என சைகைகளால் கோரிக்கை வைத்தார், இதனை ரசிகர்களும் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். விராட் கோலியின் இந்த செயலை பார்த்த நவீன் உல் ஹக்கும் உடனடியாக விராட் கோலியிடம் தனது நன்றியை தெரிவித்தார்.
விராட் கோலியின் பெருந்தன்மையான இந்த செயல் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ இங்கே;
— No-No-Crix (@Hanji_CricDekho) October 11, 2023