எல்லாரும் இந்த டீம அசால்டா நினைக்குறாங்க... ஆனா இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த டீம் தான்; இர்பான் பதான் கணிப்பு !! 1
எல்லாரும் இந்த டீம அசால்டா நினைக்குறாங்க… ஆனா இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த டீம் தான்; இர்பான் பதான் கணிப்பு

முன்னாள் இந்திய வீரரான் இர்பான் பதான், உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை போன்று இந்த முறையும் இந்திய அணியே உலகக்கோப்பையை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களும் கணித்து வருகின்றனர்.

எல்லாரும் இந்த டீம அசால்டா நினைக்குறாங்க... ஆனா இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த டீம் தான்; இர்பான் பதான் கணிப்பு !! 2

அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான், இறுதி போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள அணிகள் எது என்பது குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறுவது உறுதி, இறுதி போட்டியில் இந்திய அணியுடன் தென் ஆப்ரிக்கா அணி மோதும்” என தெரிவித்துள்ளார்.

எல்லாரும் இந்த டீம அசால்டா நினைக்குறாங்க... ஆனா இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த டீம் தான்; இர்பான் பதான் கணிப்பு !! 3

தென் ஆப்ரிக்கா அணி சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. அனுபவமிக்க வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணியில் பெரிதாக இல்லை  என்பதால் தென் ஆப்ரிக்கா அணிக்கான வெற்றி வாய்ப்பு மிக குறைவு என்றே பல வீரர்கள் பேசி வந்தாலும், இர்பான் பதான் தென் ஆப்ரிக்கா அணியை தேர்வு செய்துள்ள ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.

இர்பான் பதானை போன்று மற்ற முன்னாள் வீரர்களின் கணிப்புகள் பின்வருமாறு;

ஜக் காலிஸ் – இந்தியா Vs  இங்கிலாந்து

கிரிஸ் கெய்ல் – இந்தியாVs   பாகிஸ்தான்

சேன் வாட்சன் – இந்தியா Vs  ஆஸ்திரேலியா

தினேஷ் கார்த்திக் – இந்தியா Vs பாகிஸ்தான்

டூபிளசிஸ் – இந்தியா Vs ஆஸ்திரேலியா/நியூசிலாந்து

வக்கார் யூனுஸ் – இந்தியா Vs  இங்கிலாந்து

டேல் ஸ்டைன் – இந்தியா Vs இங்கிலாந்து

இர்பான் பதான் – இந்தியா Vs  தென் ஆப்ரிக்கா

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் – இந்தியா Vs  ஆஸ்திரேலியா

பியூஸ் சாவ்லா – இந்தியா Vs  இங்கிலாந்து

ஆரோன் பின்ச் – ஆஸ்திரேலியா Vs  தென் ஆப்ரிக்கா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *