இந்தியாவுக்கு வாய்ப்பு இல்ல... சாம்பியன் பட்டம் வெல்ல போறது இந்த டீம் தான்; சுனில் கவாஸ்கர் அதிரடி !! 1
இந்தியாவுக்கு வாய்ப்பு இல்ல… சாம்பியன் பட்டம் வெல்ல போறது இந்த டீம் தான்; சுனில் கவாஸ்கர் அதிரடி

உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே கிரிக்கெட் வட்டாரத்தின் ஒரே டாப்பிக்காக இருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என அனைவரும் உலகக்கோப்பை தொடர் குறீத்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் அள்ளி வீசி வருகின்றனர். எந்த எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும்..? எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள வீரர்கள் யார்..? என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கு வாய்ப்பு இல்ல... சாம்பியன் பட்டம் வெல்ல போறது இந்த டீம் தான்; சுனில் கவாஸ்கர் அதிரடி !! 2

உலகக்கோப்பை தொடர் குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் பலர் இந்த முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என பேசி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரோ, இங்கிலாந்து அணியெ சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வாய்ப்பு இல்ல... சாம்பியன் பட்டம் வெல்ல போறது இந்த டீம் தான்; சுனில் கவாஸ்கர் அதிரடி !! 3

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியே மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ளும் என நம்புகிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. இங்கிலாந்து அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அணியில் உலகின் மிக சிறந்த மூன்று ஆல் ரவுண்டர்கள் உள்ளனர், இது இங்கிலாந்து அணியின் மிகப்பெரும் பலம். இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர்களால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் அவர்களால் போட்டியையும் இலகுவாக மாற்றி கொடுக்க முடியும், இதன் காரணமாகவே இங்கிலாந்து அணியே சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *