குல்தீப் யாதவ், அஸ்வின் இல்லை... உலகக்கோப்பையில் எல்லா டீமையும் வச்சு செய்ய போவது இந்த சுழற்பந்து வீச்சாளர் தான்; முரளிதரன் உறுதி !! 1
குல்தீப் யாதவ், அஸ்வின் இல்லை… உலகக்கோப்பையில் எல்லா டீமையும் வச்சு செய்ய போவது இந்த சுழற்பந்து வீச்சாளர் தான்; முரளிதரன் உறுதி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக திகழ வாய்ப்புள்ள சுழற்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

குல்தீப் யாதவ், அஸ்வின் இல்லை... உலகக்கோப்பையில் எல்லா டீமையும் வச்சு செய்ய போவது இந்த சுழற்பந்து வீச்சாளர் தான்; முரளிதரன் உறுதி !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில திங்களில் துவங்க உள்ளதால், உலகக்கோப்பை தொடரே தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காகவும் உள்ளது. இதனால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தனது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வரும் முன்னாள் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன், அனைத்து அணிகளையும் திணறடிக்க வாய்ப்புள்ள சுழற்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.

குல்தீப் யாதவ், அஸ்வின் இல்லை... உலகக்கோப்பையில் எல்லா டீமையும் வச்சு செய்ய போவது இந்த சுழற்பந்து வீச்சாளர் தான்; முரளிதரன் உறுதி !! 3

இது குறித்து முத்தையா முரளிதரன் பேசுகையில், “உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விசயம். இந்தியாவின் பெரும்பாலான ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமானை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தில் இருக்கும் ஆடுகளங்களை விட இந்தியாவின் ஆடுகங்கள் முற்றிலும் மாறுபட்டவை. சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் இந்த தொடரில் இருக்கும் என கருதுகிறேன். டி.20 போட்டிகளை போன்று இல்லாமல் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு வீரர்களுக்கும் 10 ஓவர்கள் கிடைக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் சிறப்பாக பந்துவீச முடியும். என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசீத் கான் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பெரும் சவாலாக திகழ்வார் என கருதுகிறேன். அவரது பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடிக்கும், அதே போல் அவரது பந்துவீச்சு மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை விட மாறுப்பட்டதாக இருக்கும். அதே போல் இலங்கை அணியின் மத்தீஷா தீக்‌ஷன்னாவும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அஜந்தா மெண்டீஸை போன்று திக்க்‌ஷனாவாலும் கேரம் பந்துகளை சிறப்பாக வீச முடிகிறது, இதை அவரது பலமாக பார்க்கிறேன். இதனால் இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *