ரோஹித் சர்மா, சுப்மன் கில் இல்லை… உலகக்கோப்பையில் இந்த பாகிஸ்தான் வீரர் தான் அதிக சதம் அடிக்க போகிறார்; கவுதம் கம்பீர் கணிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகமான சதம் அடிக்க வாய்ப்புள்ள வீரர் யார் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சில தினங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கும் நிலையில், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், உலகக்கோப்பை தொடரில் அதிகமான சதம் அடிக்க வாய்ப்புள்ள வீரர் யார் என்பது குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “பாபர் அசாமின் பேட்டிங்கில் ஒரு தனித்துவம் உள்ளது. பாபர் அசாமின் பேட்டிங் திறமையை குறைத்து மதிப்பிட கூடாது, என்னை பொறுத்தவரையில் பாபர் அசாம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக மூன்று அல்லது நான்கு சதங்கள் அடித்து கொடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய கவுதம் கம்பீர், “உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாமின் பங்களிப்பு பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும், உலகக்கோப்பை தொடரில் அவர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றே நம்புகிறேன். வெகு சில பேட்ஸ்மேன்களால் மட்டுமே களத்தில் நீண்ட நேரம் தாக்குபிடித்து விளையாட முடியும், பாபர் அசாமும் அப்படியான பேட்ஸ்மேன் தான். ரோஹித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டேவிட் வார்னர் போன்ற வீரர்களும் சிறந்த பேட்ஸ்மேன்கள் தான் என்றாலும் பாபர் அசாம் மற்ற வீரர்களை விட திறமையான பேட்ஸ்மேன்” என்று தெரிவித்தார்.