அஸ்வின் பெரிய திறமைசாலி... ஆனா கண்டிப்பா டீம்ல தான் இடம் கொடுக்க மாட்டாங்க; முன்னாள் வீரர் உறுதி !! 1
அஸ்வின் பெரிய திறமைசாலி… ஆனா கண்டிப்பா டீம்ல தான் இடம் கொடுக்க மாட்டாங்க; முன்னாள் வீரர் உறுதி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

அஸ்வின் பெரிய திறமைசாலி... ஆனா கண்டிப்பா டீம்ல தான் இடம் கொடுக்க மாட்டாங்க; முன்னாள் வீரர் உறுதி !! 2

உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி, அதன்பின் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணி இந்த முறையாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பெரிய திறமைசாலி... ஆனா கண்டிப்பா டீம்ல தான் இடம் கொடுக்க மாட்டாங்க; முன்னாள் வீரர் உறுதி !! 3

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “இந்திய அணியின் மிடில் ஆர்டர் கவலைக்குரிய வகையில் உள்ளது என்பதே உண்மை. உலகக்கோப்பை தொடர் அதிக சவால் நிறைந்ததாக இருக்கும், அழுத்தங்களை சமாளிக்க அனுபவம் மிக அவசியம். அனுபவம் மற்ற வீரர்களை விட அஸ்வினிடம் அதிகமான இருப்பதால் அவர் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் முக்கியமான போட்டிகளில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இந்திய அணி ஆடும் லெவனில் வாய்ப்பே கொடுக்காது என்றே கருதுகிறேன். அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவரால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து கொடுக்க முடியும். மிடில் ஓவர்களில் ஓரிரு விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், எதிரணிக்கு சரியான பார்டர்சிப் அமையாது, ஆனால் என்னை பொறுத்தவரையில் அஸ்வினுக்கு பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் தான்” என்று தெரிவித்தார்.

அஸ்வின் பெரிய திறமைசாலி... ஆனா கண்டிப்பா டீம்ல தான் இடம் கொடுக்க மாட்டாங்க; முன்னாள் வீரர் உறுதி !! 4

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் போன்ற சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் பலரும் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினாலும், அணியை தேவையை கருத்தில் கொண்டு அஸ்வினுக்கு ஆடும் லெவனில் முக்கியத்துவம் தரப்படாது என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. ஒருவேளை இந்திய அணிக்கு அஸ்வின் திறமையின் மீது சந்தேகம் இருந்தால் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடனான பயிற்சி போட்டிகளில் அஸ்வினை விளையாட வைத்து அவரை பரிசோதித்து கொள்ள வேண்டும் என்பதும் கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *