விட்றாதீங்க... ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸை போன்ற இவரும் திறமையான ஆளு; சென்னை அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் சுரேஷ் ரெய்னா !! 1
விட்றாதீங்க… ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸை போன்ற இவரும் திறமையான ஆளு; சென்னை அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் சுரேஷ் ரெய்னா

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷர்துல் தாகூரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் 19ம் தேதி நடைபெற உள்ளது. கைவசம் 31.4 கோடி ரூபாய் வைத்திருக்கும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யார் யாரை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வரும், ஷர்துல் தாகூரை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

விட்றாதீங்க... ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸை போன்ற இவரும் திறமையான ஆளு; சென்னை அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் சுரேஷ் ரெய்னா !! 2

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “ஷர்துல் தாகூர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை போன்ற வீரர். ஷர்துல் தாகூர் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொல்கத்தா அணி அவரை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர் சென்னை அணிக்காக விளையாடிய போது தனது வேலையை மிக சரியாக செய்தார். ஷர்துல் தாகூர் சென்னை அணியின் நிர்வாகத்தையும், தோனியின் கேப்டன்சியையும் நன்கு அறிந்தவர். தோனி ஷர்துல் தாகூரை நிச்சயமாக சரியாக பயன்படுத்தி கொள்வார். சென்னை அணி ஷர்துல் தாகூரை ஏலத்தில் எடுத்தால் அது சென்னை அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்” என்று தெரிவித்தார்.

சென்னை அணி தக்க வைத்து கொண்ட வீரர்கள் பட்டியல்; 

ருத்துராஜ் கெய்க்வாட், டீவன் கான்வே, மொய்ன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, அஜின்கியா ரஹானே, தீபக் சாஹர், மகேஷ் தீக்‌ஷன்னா, முகேஷ் சவுத்ரி, மிட்செல் சாட்னர், ராஜவர்தன் ஹங்கரேக்கர், சிம்ரஜித் சிங், மத்தீஷா பதிரானா, துசான் தேஸ்பாண்டே, பிரசாந்த் சோலான்கி, சேக் ரசீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல்.

சென்னை அணி விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல்; 

பென் ஸ்டோக்ஸ், டூவைன் ப்ரெடோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, அம்பத்தி ராயூடு, ஆகாஷ் சிங், கெய்ல் ஜெமிசன், சிசான் மகாலா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *