இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் லயர்ஸ் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பானது உலக அளவில் உள்ள இளம் வீரர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க உதவி செய்து வருகிறது.
அதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
லயர்ஸ் குடும்பத்தில் ஒருவராக சேர்ந்தது மிகவும் பெருமையாக உள்ளது. இதன் மூலம் இளம்தலைமுறையினர் தங்கள் வாழ்வில் சாதிக்க உதவி புரிய முடியும். அதே போல் விளையாட்டுத் துறையானது அனைவரின் வாழ்க்கையையும் மாற்றும் திறன் கொண்டது. அது என் வாழ்க்கையை மாற்றியது போல் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றும் நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது தான் அடித்த தொடர்ச்சியான ஐந்து சிக்சர்கள் குறித்து யுவராஜ் பேசினார். அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக ஜந்து சிக்சர்கள் அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அவர் கூறினார்.