பந்தை வேகமாக வீசுவதில் தேறிவிட்டேன்: புவனேஸ்வர் குமார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 252 ரன்கள் சேர்த்தது. குறைந்த ஸ்கோர் என்றாலும் ஆஸ்திரேலியாவை 200 ரன்னுக்குள் சுருட்டியது. இதற்கு முக்கிய காரணம் புவனேஸ்வர் குமார். அவர் 6.1 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்கள் அடங்கும். […]