தெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடக்கூடாது: சென்னையில், ஜான்டிரோட்ஸ் பேட்டி

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான ஜான்டி ரோட்ஸ் சென்னையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சாதனைகள் மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. வெவ்வேறு காலக்கட்டங்களில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசுவதை நான் விரும்புவதில்லை. சச்சின் தெண்டுல்கரும், விராட் கோலியும் வியப்புக்குரிய வீரர்கள். இருவரும் அவரவர் பாணியில் சிறந்தவர்கள். தெண்டுல்கர் எப்போதும் தெண்டுல்கர் தான். […]