தோனி கேப்டனாகாமல் இருந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கி இருந்தால் பிரமாதப்படுத்தியிருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்திருக்கிறார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் “கிரிக்கெட் கனெக்டட்” நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் ” இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது தோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது. அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு தோனியை ரசித்திருக்கும். […]