ஷர்துல் தாகூருக்கும்.. முகமது ஷமிக்கும் என்னடா சம்மந்தம்; முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணி.. வெறுப்பான ரசிகர்கள் !! 1
ஷர்துல் தாகூருக்கும்.. முகமது ஷமிக்கும் என்னடா சம்மந்தம்; முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணி.. வெறுப்பான ரசிகர்கள்

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன.

ஷர்துல் தாகூருக்கும்.. முகமது ஷமிக்கும் என்னடா சம்மந்தம்; முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணி.. வெறுப்பான ரசிகர்கள் !! 2

இலங்கையின் பல்லாகலே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யாருமே எதிர்பாராத வகையில் முகமது ஷமியை ஆடும் லெவனில் எடுக்காத இந்திய அணி அவரது இடத்தை ஷர்துல் தாகூருக்கு இடம் கொடுத்துள்ளது.

ஷர்துல் தாகூருக்கும்.. முகமது ஷமிக்கும் என்னடா சம்மந்தம்; முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணி.. வெறுப்பான ரசிகர்கள் !! 3

முகமது ஷமியின் பங்களிப்பே இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றே அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காரணமே இல்லாமல் முகமது ஷமி ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் சமூக வலைதளங்களிலும் இந்திய அணியின் இந்த முடிவு கடும் விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் இந்த முடிவு குறித்தான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *