ஐபில் தொடக்கத்தில் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர் வரவேண்டும் என காத்திருந்த ஐதராபாத் அணி, அவர் முதல் போட்டியில் ஜொலிக்காவிட்டதால், அடுத்த போட்டியில் அவரை தூக்கிவிட்டு ஹென்றிக்ஸை சேர்த்தனர். கடந்த போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை.
ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கரை சேர்ப்பதற்காக சுழற்பந்து வீச்சாளர் பிபுல் சர்மாவை கடந்த போட்டியில் சேர்க்கவில்லை. ஆனால் இந்த போட்டியில் பிபுல் சர்மா இடம் பெற்றுள்ளார்.
கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றம் தன் செய்துள்ளார்கள். அனுபவம் உள்ள பியூஷ் சாவ்லாவை எடுத்துவிட்டு குலதீப் சிங்க்கை சேர்த்துள்ளார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யா குமார் யாதவ், கோலின் டீ க்ராந்தோம்மே, சுனில் நரேன், கிறிஸ் ஓக்ஸ், குலதீப் யாதவ், ட்ரெண்ட் போல்ட், உமேஷ் யாதவ்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
டேவிட் வார்னர், ஷிகர் தவான், மொய்சஸ் ஹென்றிக்ஸ், தீபக் ஹூடா, யுவராஜ் சிங்க், நமன் ஓஜா, பென் கட்டிங், ரஷீத் கான், பிபுல் சர்மா, புவனேஸ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா.