ஐபில் 10: முதல் வாரத்தில் பட்டயகிளப்பிய வீரர்கள் – தற்போது ஐபில் 10 சீசன் நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 5-ஆம் தேதி ஆரம்பித்த ஐபில்-10, ஒரே வாரத்தில் விறுவிறுப்பாக்கியது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் பட்டயகிளப்பி வருகிறார்கள். கிறிஸ் லின் முதல் கிறிஸ் மோரிஸ் வரை இந்த ஐபில்-இல் கலக்கி கொண்டு வருகிறார்கள். இந்த முதல் வாரத்தில் பட்டயகிளப்பிய ஐந்து வீரர்களை பாப்போம்.
சஞ்சு சாம்சன்
டெல்லி டேர்டெவில்ஸின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஐபில்-இல் முதல் சதம் அடித்தார். பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் 13 ரன்னில் ஏமாற்றினாலும், புனேவுக்கு எதிரான போட்டியில் புனே பந்துவீச்சாளர்களை மூச்சி திணற வைத்தார் சாம்சன். இந்த ஐபில்-இல் முதல் சதம் அடித்த வீரர் டெல்லியின் சஞ்சு சாம்சன் ஆவார்.
ஹர்டிக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா கடந்த ஆண்டு ஐபில்-இல் ஜொலித்து விட்டு, இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த வருடம் முதல் போட்டியில் 35* ரன்னும், இரண்டாவது போட்டி கொல்கத்தாவிடம் தோற்றுப்போகும் நிலைமையில் இருந்த மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்துவந்தார் பாண்டியா. கொல்கத்தாவின் பந்துவீச்சை நாலாபக்கமும் பறக்கவிட்டு மும்பையை வெற்றி பெற செய்தார்.
கிளென் மேக்ஸ்வெல்
கிங்ஸ் XI பஞ்சாப் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஐபில்-இல் பஞ்சாபிற்கு கேப்டனாக இருக்கிறார். இந்த ஐபில்-இல் 2 போட்டிகளில் 87 ரன் அடித்திருக்கிறார். அவர் முதல் ஆட்டத்தில் புனேவுடன் 44* ரன்னும், இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 43* ரன்னும் அடித்து பஞ்சாபிற்கு வெற்றி தேடி தந்தார்.
ரஷீத் கான்
ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆப்கானிஸ்தானில் கலக்கி விட்டு, இந்தியாவில் பட்டயகிளப்ப வந்துள்ளார். இந்த சீசனில் சன் ரைசர் ஐதராபாத்துக்காக விளையாடுகிறார் ரஷீத் கான். பெங்களூடன் மோதிய முதல் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அடுத்த போட்டியில் குஜராத்துடன் 19 கொடுத்து 3 விக்கெட் எடுத்து அசத்தினார். ஐபில் ஆடும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் இவர் ஆவர்.
கிறிஸ் லின்
கொல்கட்டாவிற்காக ஆடும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின், இந்த ஐபில்-இல் முதல் இரண்டு போட்டியில் அருமையாக விளையாடியுள்ளார். ரஸ்ஸலுக்கு பதிலாக அணியில் இருக்கும் லின், ரஸ்ஸல் இல்லாத கவலையை போக்கினார். குஜராத்துடன் ஆடிய முதல் ஆட்டத்தில் 93* ரன்னும், அடுத்த போட்டியில் மும்பையிடம் 32 ரன்கள் அடித்தார். அவர் அவுட் ஆகாமல் கடைசி வரை நின்றால், 20 ஓவரில் 300 ரன் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வெளியிட்ட நாள்: 12/04/2017