இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய பேட்டிங் திறமையால் புனே அணியை வெற்றி பெற செய்து குஜராத் லயன்ஸ் அணியை கதற வைத்தார்.
39வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பந்து வீச முடிவெடுத்தார். முதலில் விளையாடிய குஜராத் லயன்ஸ் 20 ஓவர் முடிவில் 161 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய புனே அணி, 10 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. அடுத்த அந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் தோனி இணைந்து அணியின் குஜராத்திடம் இருந்து வெற்றியை கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தார்கள். கடைசி 2 ஓவருக்கு 24 தேவை பட்டது. புனே அணி அடிக்காது என நினைத்த போது, பென் ஸ்டோக்ஸ் இரண்டு இமாலய சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றியை உறுதி செய்தார். பென் ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 103* ரன் அடித்தார். அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
கடைசியாக கெவின் பீட்டர்சன் 2012-இல் டெல்லி அணிக்காக ஐபில்-இல் சதம் அடித்தார். அதன் பிறகு ஐபில்-இல் சதம் அடிக்கும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் தட்டி சென்றார்.