விளையாட்டு என்பதைத் தாண்டி சர்வதேச விளையாட்டு என்றாலே பணம் கொழிக்கும் கிட்டத்தட்ட ஒரு வர்த்தகமாகவே நடைபெற்று வருகிறது. அந்த மொத்த துறையிம் பல ஆயின் கோடிக்காக சந்தையை வைத்திருந்தாலும், அதில் பங்கு பெறும் வீரர்களும் சில நூறு கோடி வர்த்தமாவது செய்வார்கள். அதே போல் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடு என்பது பல ஆயிரம் கோடி புழங்கும் ஒரு சந்தையாகும். சமீபத்தில் வந்த ஐ.பி.எல் ஏலத்தொகை 16000 கோடியே அதற்க்கக சிறிய சான்றாகும். இப்படி ஒரு மக்கள் சந்தையை வைத்து ஈட்டப்படும் வருமானம் கிரிக்கெட் வீரர்களுக்கும் செல்வது நிதர்சன்மான உண்மை. ஒவ்வொரு முறை ஆடுகளத்திற்கு செல்லும் போதும் வீரர்களுக்கான மதிப்பும் மக்களிடத்தில் அதிகரிப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த மக்களிடத்தில் உள்ள மதிப்பினை வைத்து பல ஆண்டுகளாக விளம்பமரம் பொது நிகழ்ச்சி என கோடிகளில் புரளும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வீடுகளை பார்த்ததுண்டா? தற்போது அவர்களின் பிரம்மாண்ட பங்களா போன்ற வீடுகளைக் காண்போம்.
1.கிறிஸ் கெய்லின் பிரம்மாண்ட பார்ட்டி ஹவுஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடும் கெய்ல் தனது நாடான் ஜமைக்காவில் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 கொடி ரூபாய்க்கு வீட்டினைத் தவிற ஒரு பார்ட்டி ஹவுஸ் கட்டி வைத்துள்ளார். இது இவர் ஜாலியாக வந்த போக மட்டும் பயன்படுத்தி வருகிறார் கெய்ல். உலகம் முழுவதும் பணம் கொழிக்கும் டி20 தொடர்களில் இவரது திறமைக்கும் அதிரடிக்கும் கிடைத்த சன்மானம் தான் இவைகள். இந்த வீடு 3 மாடி கொண்டது. இது போக இவரது தனி வீட்டில் ஸ்விம்மிங் பூல், பில்லியர்ட்ஸ் அரங்கம், டான்ஸ் ஃப்லோர், ஒடு தியேட்டர் அனைத்தையும் வைத்துள்ளார்.