ரோஹித் சர்மாவ குறையே சொல்ல முடியாது... தரமான கேப்டன்; யுவராஜ் சிங் ஆதரவு !! 1

ரோஹித் சர்மாவ குறையே சொல்ல முடியாது… தரமான கேப்டன்; யுவராஜ் சிங் ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் 10 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலு9ம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி சொதப்பியே வருகிறது.

ரோஹித் சர்மாவ குறையே சொல்ல முடியாது... தரமான கேப்டன்; யுவராஜ் சிங் ஆதரவு !! 2

வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், கடைசி ஒரு விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் இந்திய அணி முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மோசமாக இருந்ததாக முகமது கைஃப் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் பலரே ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தனர். 2 விக்கெட்டுகளை எடுத்து கொடுத்த வாசிங்டன் சுந்தருக்கு வெறும் 5 ஓவர்கள் மட்டுமே ரோஹித் சர்மா, ஒரு விக்கெட் கூட எடுக்காத சபாஷ் அஹமதிற்கு அடுத்தடுத்து ஓவர்கள் கொடுத்ததே ரோஹித் சர்மா மீதான விமர்ச்சனங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக உள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு 10 மதிப்பெண்கள் அளித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்று தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு உங்களது மதிப்பெண் என்ன என ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருந்தது. ரசிகர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள பதிவிடப்பட்ட அந்த பதிவிற்கு யுவராஜ் சிங் தானாக முன்வந்து பதில் கொடுத்துள்ளார். யுவராஜ் சிங் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பதாக பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *