Cricket, One day match, Dadswell, South Africa, 490 Run

கிரிக்கெட் போட்டியில் டி20 போட்டிகள் அறிமுகம் படுத்திய பிறகு, அனைவரும் சிக்ஸர், பவுண்டரி என விளாசி அசத்துகிறார்கள். இதனால், டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என எந்த விதமான போட்டியாக இருந்தாலும் அடித்து விளையாடவே விரும்புகிறார்கள்.

நவம்பர் 18ஆம் தேதி அன்று தென்னாபிரிக்காவில் நடந்த ஒரு உள்ளூர் 50 ஓவர் போட்டியில், தனது 20வது பிறந்தநாள் அன்று 151 பந்துகளில் 490 ரன் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக்-ரேட் 325 ஆகும்.

அதிரடியாக விளையாடிய ஷேன் டேட்ஸ்வெல், அந்த போட்டியில் 57 சிக்ஸர் மற்றும் 27 பவுண்டரிகள் விளாசி அனைவரையும் குஷி படுத்தினார்.

Cricket, One day match, Dadswell, South Africa, 490 Run

அவருடைய அதிரடி ஆட்டத்தால், அவரின் கிளப் அணி NWU புக்கே, கொடுக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 677 ரன் எடுத்து ஆச்சரியப்படுத்தியது.

அடுத்து விளையாடிய எதிரணி போட்ச் டிராப் 9 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், சர்வதேச அணிகள் அடிக்கும் ஸ்கோரை தான் இந்த அணி அடித்தது. இந்த அணிக்காக ஒரே ஒரு வீரர் மட்டும் தான் அரைசதம் அடித்தார், அவரும் 78 பந்துகளில் 53 ரன் அடித்து அவுட் ஆனார்.

Cricket, One day match, Dadswell, South Africa, 490 Run

Cricket, One day match, Dadswell, South Africa, 490 Run

புக்கே அணிக்காக டேட்ஸ்வெல் தவிர்த்து ,ருவான் ஹாஸ்ப்ரோக் 54 பந்தில் 104 ரன் அடித்தார், அதில் 6 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும்.

போட்ச் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சோர்ந்து போனார்கள். 6 பந்து வீச்சாளர்களில் 4 பந்து வீச்சாளர்கள் 10 ஓவருக்கு 100 ரன்னுக்கு மேல் கொடுத்தார்கள். மற்ற இருவர் 90 ரன்கள் கொடுத்தார்கள்.

Cricket, One day match, Dadswell, South Africa, 490 Run

Cricket, One day match, Dadswell, South Africa, 490 Run

புக்கே அணியின் வீரர்கள், அணியின் மொத்த ஸ்கோரான 677 ரன்னில், பவுண்டரிகளில் மட்டுமே 570 ரன் அடித்தார்கள் (63 சிக்ஸர் மற்றும் 48 பவுண்டரி).

அந்த அணி முதல் முதல் விக்கெட்டுக்கு 194 ரன்னும், இரண்டாவது விக்கெட்டுக்கு 204 ரன்னும் மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்கு 220 ரன்னும் சேர்த்தார்கள்.

490 ரன் அடித்து அசத்திய டேட்ஸ்வெல், பந்துவீச்சில் சிறப்பாக செயல் பட்டார். ஏழு ஓவர் வீசிய அவர் 32 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *