28 வயதான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்து வரும் மினி உலக கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கடினமான தொடராவாகவே இருக்கும்.
இந்த ஜனவரி மாதம் தான் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். விராட் கோலியின் தலைமையில் இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
ஆனால் இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் விராட் கோலிக்கு கடினமாகவே இருக்கும். அவரது தலைமையில் முதல் முறையாக இந்திய அணி ஐசிசி தொடரில் விளையாட உள்ளது. நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் உள்ளது.
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன், இந்த முறை தப்பு எதுவும் இருக்காது, 8 அணிகள் பங்கேற்பதால், பல சுவாரசியமான போட்டிகள் இருக்கும் என கோலி கூறினார்.
அத்துடன் முதல் பந்தில் இருந்து சிறப்பாக செயல் படவேண்டும் என கூறியிருந்தார்.
“தொடர் சிறிதாக உள்ளது மற்றும் டாப் 8 அணிகள் பங்கேற்பதால், அனைத்து போட்டிகளும் சுவாரசியமாக இருக்கும். உலக கோப்பையை விட எந்த தொடரில் நெறய போட்டிகள் இருக்கும். உலக கோப்பையில், லீக் போட்டிகள் இருப்பதால், கடைசி நேரத்தில் வென்று கோப்பையை வெல்லலாம். ஆனால், இந்த தொடரில், முதல் போட்டி தோற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதியாவது சந்தேகம் ஆகி விடும். இதனால், இந்த தொடரின் முதல் பந்தில் இருந்தே சிறப்பாக செயல் படுவோம்,” என கோலி கூறினார்.