தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்துடன் மோதுகிறது இந்திய அணி.
முதலில் டாஸ் வென்ற விராட் கோலி, பந்துவீச முடிவு செய்தார். தொடக்கத்தில் மெதுவாக பீல்டிங் செய்ததால், ரோகித் சர்மா மீது காண்டானார் இந்திய கேப்டன் விராட் கோலி. புவனேஷ்வர் வீசிய 2வது பந்து பவுண்டரி அடித்து, அடுத்த பந்தில் சிங்கள் அடிக்க நினைத்தார் சபீர். அந்த பந்தில் இக்பாலை ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தது, ஆனால் பந்திடம் ரோகித் சர்மா மெதுவாக சென்றதால், ரன்-அவுட் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
முதல் ஓவரில் அற்புதமாக பந்து வீசினார் புவனேஸ்வர் குமார். முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா சர்க்கார் விக்கெட்டை எடுத்து அசத்தினார். புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ட்ரைவ் அடிக்க நினைத்த சவுமியா, அவருடைய பேட் எட்ஜ் ஆகி ஸ்டம்ப் மேல் பட்டது.