அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதற்கு முயற்சி செய்து வரும் இந்திய அணி தேர்வாளர்கள், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்காணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல இளம் வீரர்களை சர்வதேச இந்திய அணியில் விளையாட வைத்து பரிசோதித்தும் வருகின்றனர்.
இருந்தபோதும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ள இந்த மூன்று வீரர்கள் சில காரணங்களால் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது.
அப்படி அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தும் உலக கோப்பை தொடரில் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ருத்ராஜ் கெய்க்வாட்.
2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து அனைவர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த ருத்ராஜ், 2022 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை, இருந்த போதும் இவர் மீது நம்பிக்கை வைத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்ந்தெடுத்தது.ஆனால் அதிலும் இவர் ஒரு போட்டியை தவிர மற்ற எதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ருத்ராஜ் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது, ஏற்கனவே உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் போன்ற துவக்க வீரர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இவரை இந்திய அணி தேர்ந்தெடுக்காது என்று பேசப்பட்டு வருகிறது.