ஆஸ்திரேலியத் தொடரில் அஸ்வினுக்கு மாற்றாக ஆடக்கூடிய 4 வீரர்கள்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்க்கான ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணியை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்திய அணியின் முன்னனி சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் தற்போது இங்கிலாந்து கவுண்ட்டி அணியில் ஆடி வருகிறார்.
தற்போது அணியில், ஒய்வளிக்கப்பட்ட இந்திய வீரர் அஸ்வினுக்கு மாற்றாக இடம் அளிக்கப்பட வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்களை தற்போது பார்ப்போம்.
4. சஹ்பாஸ் நடீம்
28 வயதான இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு ரஞ்சு கோப்பை தொடரில் 20 போட்டிகளில் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
டெல்லி அணிக்காக ஐ.பி.எல் தொடரில் ஆடிவருகிறார். அதிலும் அற்புதமாக ஆடிவரும் அவர் அஸ்வினுக்கு மாற்றாக வர வாய்ப்புகள் அதிகம் தான்.
சமீபத்திய ‘ஏ’ அனிகளுக்கான முத்தரப்பு தொடரில் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் நடீம்.
3. ஜயந்த் யாதவ்
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்க் என அனைத்திலும் அற்புதமாக செயல்பட்டவர் இவர்.
ஐ.பி.எல் இல் 3 போட்டிகளில் மட்டுமே ஆடினாலும் சிக்கனமாக 4.14ல் பந்து வீசியுள்ளார்.
3.வாசிங்க்டன் சுந்தர்
17 வயதேயான இளம் தமிழக வீரர் வாசிங்க்டன் சுந்தர். கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் புனே அணிக்காக சுழற்ப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
கடந்த விஜய் ஹசாரே ட்ராபி மற்றும் தியோதர் கோப்பையில் தமிழக அணி பட்டம் வென்றது. அந்த அனியில் முக்கியாமான் வீரராக திகழ்ந்தார் சுந்தர்.
அந்த இரு தொடர்களிலும் சேர்த்து 9 போட்டிகஈல்ல் விளையாடியுள்ள அவர் வெறும் 12 சராசரியில் 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3.93 என சிக்கனமாகவும் ஓந்து வீசியுள்ளார்.
4.அமித் மிஸ்ரா
ராசி இல்லாத கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா.
அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்தும், ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருந்ததால், நிரந்தரமாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.ஆனால், ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறார்.
கடந்த ஆண்டு நியூஸிலாந்துடன் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அதிக விக்கெட் எடுத்தவர் அமித் மிஸ்ரா தான்.
ஆனால், அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, இலங்கை தொடர் என எந்த தொடரிலும் அவர் இடம் பிடிக்கவில்லை.
அவரது அனுபவம் வைத்து பார்த்தால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.