ஹசிம் அம்லா – 55
ஹாஷிம் அம்லா 55 சதங்களை 21ம் நூற்றாண்டில் குவித்திருக்கிறார். தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் 2004-ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 27 சதங்களும் டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்களும் குவித்திருக்கிறார். சர்வதேச அளவில் 349 போட்டிகளில் விளையாடி 18,672 ரன்கள் குவித்திருக்கிறார். 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9282 ரன்கள் குவித்திருக்கிறார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8113 ரன்களும், அதே சமயம் 44 டி20 போட்டிகளில் விளையாடி 1277 ரன்கள் குவித்திருக்கிறார்.