2,ஸ்பிரிங் பேட் பயன்படுத்திய ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா அணிக்காக தலைமையேற்று பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் பற்றி மக்களிடத்தில் பரவியிருந்த கட்டுக்கதை பற்றி இங்கு காண்போம்.
2003 இல் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது,சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தான் இந்த போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 359 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் 121 பந்துகளுக்கு 140 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் ஸ்பிரிங் வைத்த பேட் தான் அந்த போட்டியில் பயன்படுத்தினார் அதனால் தான் இவர் அதிரடியாக விளையாடினார் என்று மக்களிடத்தில் தவறான செய்தி பரப்பப்பட்டது. இது சம்பந்தமாக அவரிடமும் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது கடைசியில் அது பொய்யான தகவல் என்று உறுதி செய்யப்பட்டது.
