ஐந்தாவது ஒருநாள் போட்டி… முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !! 1

ஐந்தாவது ஒருநாள் போட்டி… முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்ச்சை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியும், தென் ஆப்ரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி எலிசெபத் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஐந்தாவது ஒருநாள் போட்டி… முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !! 2

இதில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்கரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இந்த போட்டியில் களம் காண்கின்றனர்.

ஐந்தாவது ஒருநாள் போட்டி… முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !! 3
India’s captain Virat Kohli, centre, celebrates with bowler Yuzvendra Chahal, right, for dismissing South Africa’s batsman JP Duminy, (AP Photo/Themba Hadebe)

ஆதே போல் தென் ஆப்ரிக்கா அணியில் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, தோனி, புவனேஷ்வர் குமார், பும்ராஹ், குல்தீப் யாதவ், சாஹல்.

தென் ஆப்ரிக்கா அணி;

ஹசீம் ஆம்லா, மார்கரம், டுமினி, டிவில்லியர்ஸ்,பெலேகுலயோ, ஹென்ரிச் க்ளேசன், ரபடா, நிகிதி, மோர்னே மார்கல், தர்பரேஷ் ஷம்சி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *