சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரிடம் பெங்காலை சேர்ந்த ஒருவர் காதலை சொல்லியதால் அவரது கைது செய்தது போலீஸ். சாரா டெண்டுல்கரின் போன் நம்பரை வாங்கி அவருக்கு போன் செய்து அவரின் காதலை கூறியிருக்கிறார். கடந்த 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பு தான் சாரா டெண்டுல்கரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
தேவ்குமார் மைட்டி என்னும் அவர் ஈஸ்ட் மிதுனப்பூரில் உள்ள மஹிஷடாலில் வசித்து வருகிறார். மும்பை போலீஸ் நேற்று அந்த வாலிபரை கைது செய்தது.
கிடைத்த தகவலின் படி, சாரா டெண்டுல்கரிடம் பேச அவர் சச்சின் டெண்டுல்கரின் அலுவலகத்திற்கும் போன் செய்திருக்கிறார். அவரது நடத்தையால் கோபமடைந்த சச்சின் டெண்டுல்கர், மும்பையில் உள்ள பந்திரா போலீஸ் ஸ்டேஷனனில் புகார் கொடுத்தார். அதன் பிறகு அவரது போன் நம்பரை டிராக் செய்த மும்பை போலீஸ், மஹிஷடாலுக்கு சென்றது. அங்கு இருக்கும் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் உதவியுடன், தேவ்குமாரை கைது செய்தது.
அவரை இன்று ஹ்லதியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவார்கள் என தகவல் வந்துள்ளது. பிறகு அவரை ரிமாண்டில் எடுத்து மும்பை போலீஸ் மும்பைக்கு அழைத்து செல்வார்கள் என தகவல் வந்தன.
மேலும் சாரா டெண்டுல்கரின் போன் நம்பர் எப்படி வந்தது எனவும் அவரிடம் போலீஸ்விசாரணை நடத்தும். அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவர் கடந்த எட்டு வருடமாக சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார். மும்பையில் உள்ள அவர்களின் உறவினர்கள் தான் சாரா டெண்டுல்கரின்போன் நம்பரை கொடுத்திருக்கிறார்கள் என தேவ்குமாரின் குடும்பத்தினர் கூறினார்கள். சொல்ல போனால், தேவ் குமார் மும்பைக்கு சென்றே 1 வருடத்திற்கு ஆகிறது என கூறுகிறார்கள்.
அவரின் ஊரில் தேவ்குமார் நல்ல ஓவியர் என கூறுகிறார்கள். ஆனால், அவரை கைது செய்ததால் அவருக்கு எந்த வித வருத்தமும் இல்லை. சாராவை காதலிப்பதாகும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது எனவும் தேவ்குமார் ஒப்புக்கொண்டார். அவரது கையில் சாராவின் பெயரை பச்சை குத்தியும் வைத்திருக்கிறார்.