ஹர்திக் பாண்டியா இருந்தாலும் இப்ப யூஸ் இல்ல.... குஜராத் டீம் இப்பவும் கெத்து தான்; பிராட் ஹாக் அதிரடி பேச்சு !! 1
ஹர்திக் பாண்டியா இருந்தாலும் இப்ப யூஸ் இல்ல…. குஜராத் டீம் இப்பவும் கெத்து தான்; பிராட் ஹாக் அதிரடி பேச்சு

ஹர்திக் பாண்டியா விலகியது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் 22ம் தேதி துவங்க உள்ளது.

அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா இருந்தாலும் இப்ப யூஸ் இல்ல.... குஜராத் டீம் இப்பவும் கெத்து தான்; பிராட் ஹாக் அதிரடி பேச்சு !! 2

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக், ஹர்திக் பாண்டியா விலகியது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் ஹர்திக் பாண்டியா விலகியது குஜராத் அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கருதுகிறேன். ஹர்திக் பாண்டியா மிக சிறந்த ஆல் அவுண்டர் மற்றும் மிடில் ஆர்டரில் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் ஒருவரை மட்டுமே நம்பி குஜராத் அணி இல்லை. குஜராத் அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாகவே உள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கடந்த தொடரை விட குஜராத் அணி தற்போது வலுவான அணியாக இருப்பதால் தற்போதைய அணிக்கு ஹர்திக்  பாண்டியாவின் தேவையே இல்லை என்பதே எனது கருத்து. ஹர்திக் பாண்டியாவை போன்றே ஒருவர் குஜராத் அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் தேவை. ஹர்திக் பாண்டியா மும்பை இந்திய அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியை மிக சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரேட் செய்து, அவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *