நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தெறி பார்முக்கு வந்து புனேவுக்காக போட்டியை வென்றுள்ளார் மகேந்திர சிங்க் தோனி. இதனால் அவரை தென்னாபிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளினார்.
தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரிமியர் லீக் நடக்கிறது. 24வது லீக் போட்டியில் ஐதராபாத்துக்கு புனேவும் மோதியது.
இதில், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங்க் தோனி நீண்ட நாளுக்கு பிறகு பார்முக்கு வந்து மரண ரீ என்ட்ரி கொடுத்தார். 177 ரன் சேசிங் செய்யும் போது, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆக, தோனி எதிரணி பந்துவீச்சாளர்களை பின்னி எடுத்தார்.இந்த ஆட்டத்தால் அவரை பிடிக்காதவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இதனால் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார் Mr.360 என கூறப்படும் ஏபி டி வில்லியர்ஸ். “தோனியின் இந்த ஆட்டத்தை காண்பதே மிகப்பெரிய ஆனந்தம். டெல்லி அணிக்காக களமிறங்கும் தென் ஆப்ரிக்காவின் ரபாடாவுக்கும் எனது வாழ்த்துக்கள்,” என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.