இந்திய அணி தற்போது இந்தியாவில் அடுத்தடுத்து தொடர்களில் பங்கேற்று வருகிரது. இலங்கை உடனான தொடரில் இருந்து தற்போது வரை இந்திய அணி ஒய்வில்லாமல் விளையாடி வருகிறது. இதற்க்காக வீரர்களையும் சுழற்சி முறையில் மாற்றி மாற்றி ஆட வைப்பதாக் அறிவித்திருந்தது பி.சி.சி.ஐ
தற்போது இந்திய அணி நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முடிந்த பின் நவம்பர் 1ஆம் தேதி டி20 தொடரும் துவங்குகிறது. அதறக்கான இந்திய அணியை தற்போது அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ.
இந்த டி20 அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இணைகளான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக லிமிட்டெட் ஓவர் போட்டியில் ஆடியது 3 மாதங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில்.
அதன் பின்னர் இலங்கை, ஆஸ்திரேலியா என இரண்டு முழு தொடரும் முடிந்துள்ள நிலையில் தற்போது நியூசிலாந்து அணியுடனான தொடர் நடந்து வருகிறது. இந்த நியூசிலாந்து தொடர் வரை லிமிட்டெட் ஓவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
அதற்க்கான விளக்கமும் பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து சரியாக தரப்படவில்லை. சமீப காலமாக இந்திய அணியில் சேர்வாக ‘யோ-யோ’ உடல் தகுதி தேர்வில் தேர்வாக வேண்டும் என்ற ஒரு அடிகோள் வைக்கப்பட்டிருக்கிரது. அந்த தேர்வில் தேர்வாகாததால் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அந்த குறிப்பிட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் லிமிட்டெட் ஓவர் அணியில் இருவரது பெயரும் இலங்கை தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அடுத்தடுது டெஸ்ட் தொடர்களில் இருவரும் தேர்வாகி வருகின்றனர். அதே வேலையில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் யுஜவேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் இருவரு அற்புதமாக் செயல்பட்டு வரும் வேலையில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவை ஓரம் கட்டி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடவைப்பதற்க்காக இது போன்ற புதிய முயற்சியை எடுத்து வருகிறதா பி.சி.சி.ஐ என்ற சந்தேகமும் வலுக்கிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கிட்டத்தட்ட தனித்தனியான அணிகளை வைத்து விளையாடுகின்றன. அதனைப் போல் இந்திய அணியும் முயற்சிக்கிறதா என்ற கண்ணோட்டத்திலும் இது பார்க்கப்படுகிறது.
தற்போது நியூசிலாந்து உடனான டி20 போட்டிக்கு அணி அறிவிக்கட்டது. அந்த அணியில் அஷ்வின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் சற்று ஏமாற்றம் அடைந்த அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘போதும் டா சாமி’ என்பது போல் கும்பிடு போட்டு ஒரு பதிவை வெளியிடுகிறார்.
ஆனால், ஒன்று தெரிகிறது அஷ்வின் சற்று ஏமாற்றத்துடன் தான் உள்ளார் என்பது.